லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது | ரெட்ரோ டிரைலர் : விதவிதமாய் 'குக்' செய்துள்ள கார்த்திக் சுப்பராஜ் | அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு |
'ஆர்ஆர்ஆர்' படம் வெளிவருவதற்கு சில நாட்களுக்கு முன்பிருந்தே இப்படம் 'பாகுபலி 2' வசூலை முறியடிக்குமா என்ற கேள்வி எழுந்தது. 'பாகுபலி 2' படம் மீதான எதிர்பார்ப்பு வெளியீட்டிற்கு முன்பாக மிக அதிகமாக இருந்தது. ஆனால், 'ஆர்ஆர்ஆர்' படத்தைப் பொறுத்தவரையில் அதில் நடித்தவர்களை விட இயக்குனர் ராஜமௌலி மீதுதான் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது.
'பாகுபலி 2' அளவிற்கு 'ஆர்ஆர்ஆர்' இல்லை என்பது பரவலான கருத்தாக உள்ளது. ராஜமவுலி, ஜுனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் வட இந்தியாவில் பல ஊர்களுக்குச் சென்று படத்திற்கு புரமோஷன் செய்தார்கள். இருப்பினும் எதிர்பார்த்த அளவிற்கு படத்தின் வசூல் அமையவில்லை என்றுதான் தகவல் வெளிவருகிறது.
ஹிந்தி மார்க்கெட்டில் முதல் நாள் 'ஆர்ஆர்ஆர்' படம் நிகர வசூலாக 20 கோடி வரையில்தான் வசூலித்துள்ளதாம். ஆனால், 'பாகுபலி 2' படம் 40 கோடியை வசூலித்துள்ளது. 'பாகுபலி 2' வசூலை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதில் பாதி அளவு வசூல் மட்டுமே கிடைத்திருப்பது பாலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றும் நாளையும் விடுமுறை தினம் என்பதால் வசூல் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். வட இந்தியாவில் படத்திற்கான உண்மையான வரவேற்பு திங்களன்றே தெரியும் என்கிறது பாலிவுட்.