கேரள தேர்தலில் போட்டியிடுகிறேனா : பாவனா பதில் | 32 வருடங்களுக்குப் பிறகு 4வது முறையாக அடூர் கோபாலகிருஷ்ணன் உடன் இணையும் மம்முட்டி | மலையாளத்தில் காளிதாஸ் ஜெயராமின் புதிய படப்பிடிப்பு துவங்கியது | 84 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழக்கு : தனுஷ் பட இயக்குனர் விளக்கம் | ஹிந்தியில் ஏ.ஆர் ரஹ்மானுக்கு பாடல் வரிகள் இரண்டாம் பட்சம் தான் : பாடகர் ரப்பி ஷெர்கில் | மங்கத்தா, திரவுபதி 2 மோதல்... மாமன், மச்சான் மோதலா | ஆண்கள் பற்றி எந்த கமெண்ட்டும் சொல்லாத தபு | 37 வருட கிடப்பிற்குப் பிறகு வெளியாகும் ரஜினிகாந்தின் ஹிந்திப் படம் | ஆஸ்கர் விருது : நாமினேஷன் பட்டியலில் இடம் பெறாத 'ஹோம்பவுண்ட்' | ‛திரெளபதி 2' படத்தை பாடமாக வைக்க வேண்டும்: சொல்கிறார் எச்.ராஜா |

ஆனந்தம், ரன், சண்டக்கோழி என பல படங்களை இயக்கிய லிங்குசாமி தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது லிங்குசாமியின் சகோதரரும் திருப்பதி பிக்சர்ஸ் உரிமையாளருமான சுபாஷ் சந்திரபோஸ் சோசியல் மீடியாவில் ரன் பார்ட்- 2 விரைவில் என்று பதிவிட்டுள்ளார்.
அதனால் தி வாரியர் படத்தை அடுத்து ரன் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்று தெரியவந்துள்ளது. மேலும் 2002ம் ஆண்டு வெளியான ரன் படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த இரண்டாம் பாகத்திலும் அவர்கள் நடிக்க போகிறார்களா? இல்லை வேறு நடிகர்கள் நடிக்கிறார்களா? என்பது விரைவில் தெரியவரும்.




