விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' | அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் | 'வா வாத்தியார்' : இப்போது வர மாட்டார் ? | ‛குட் பேட் அக்லி' : விமர்சனங்களை மீறி முதல் நாள் வசூல் |
30 ஆண்டுகளுக்கு முன்பு கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படமான ராசுக்குட்டியில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஐஸ்வர்யா. நடிகை லட்சுமியின் மகள். தற்போது இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கிறார்கள். ஒலிம்பியா மூவீஸ் சார்பில் எஸ்.அம்பேத்குமார் தயாரிக்கும் பெயரிடப்படாத படத்தில் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தை கணேஷ் கே.பாபு இயக்குகிறார். முதல் நீ முடிவும் நீ' படப்புகழ் ஹரிஷ், 'வாழ்' படப்புகழ் பிரதீப் ஆண்டனி உள்பட பலர் நடிக்கிறார்கள். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறர், ஜென் மார்ட்டின் இசை அமைக்கிறார். ரொமான்ஸ், காமெடி, நிறைந்த இதன் படப்பிடிப்பு, இந்த மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்கி நடந்து வருகிறது.