ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
இயக்குனர் சிவா கடைசியாக ரஜினிகாந்த் நடிப்பில் 'அண்ணாத்த' படத்தை இயக்கியிருந்தார். சமீபத்தில் நேர்காணலில் கூறிய சிவா , தான் அடுத்ததாக ரஜினி, அஜித், விஜய் ஆகியோருடன் புதிய படத்திற்காக பேச்சு வார்த்தை நடந்து வருவதாக குறிப்பிட்டார் .
இந்நிலையில் அவர் அடுத்ததாக சூர்யா நடிப்பில் புதிய படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது . கிராமத்து கதைக்களத்தில் இருக்கும் இப்படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் . ஏற்கனவே சூர்யாவின் ஒரு படத்தை சிவா இயக்குவதாக இருந்தது. ஆனால் ரஜினி பட வாய்ப்பு வந்ததால் இந்த படம் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இதையடுத்து சிவா இயக்கத்தில் நடிப்பார் என தெரிகிறது. இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கிறார்.