Advertisement

சிறப்புச்செய்திகள்

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் மவுன படமாக உருவாகும் 'காந்தி டாக்ஸ்' | நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கத்திற்கு நடிகர் உதயா கண்டனம் | கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு | முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

இல்லத்தரசிகளுக்கு 1000 ரூபாய் திட்டம் : விளாசும் பாடலாசிரியர் தாமரை

22 மார், 2022 - 13:05 IST
எழுத்தின் அளவு:
Lyricist-Thamarai-slams-Rs.1000-plans-for-House-wife

தமிழக அரசு இல்லத்தரசிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை கொண்டு வர இருக்கிறது. அதன் முதல் கட்டமாக உயர்கல்வி கற்கும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. இதனை பாடலாசிரியர் தாமரை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பதாவது:

வெளிவேலைக்குப் போகாமல் வீட்டில் இருந்து தன் வீட்டு வேலைகளை, தன் குழந்தைகளை மட்டுமே பார்த்துக் கொள்ளும், கணவனின் ஊதியத்தை மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'இல்லத்தரசி'களுக்கு 1000 ரூபாய் மாத உதவி தருவதாக சிலகாலமாக அரசியல் கட்சிகள் பேசி வருகின்றனர். அப்போதே நினைத்தேன், இதென்ன மடத்தனம், தம் குடும்பங்களைக் கவனித்துக் கொண்டு வீட்டிலிருக்கும் பெண்களுக்கு எதற்காக அரசாங்கம் உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்று.

தன் வீட்டில் தனக்காக, தன் குழந்தைகளுக்காக, தன் குடும்பத்துக்காக உழைக்கும் மனைவிக்கு ஊதியம் தர வேண்டியது அந்த உழைப்பின் பலனை அனுபவிக்கும் கணவனது பொறுப்பு. அரசாங்கம் எதற்காகக் கொடுக்க வேண்டும். 'நீ எதற்காக என் மனைவிக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் ?' என்று ஓர் எதிர்ப்புக் குரல்கூட வரவில்லையே, எப்படி இந்த சிக்கலை வேறுவகையில்தான் எதிர்கொண்டாக வேண்டுமேயொழிய அரசாங்கம் உதவித்தொகை கொடுக்க வேண்டும் என்பது தவறான கருத்து.

வீட்டுவேலையும் செய்துகொண்டு வெளிவேலைக்கும் போய்வரும் பெண்களின் நிலையை இதோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமில்லையா ? அவர்களெல்லாம் முட்டாள்களா ? அவர்களுக்கும் அரசாங்கம் பரிவுத்தொகை ஏதேனும் கொடுக்குமா ? இன்னும் ஒருபடி மேலே போய், வேலைவெட்டியில்லாத ஆணுக்கு, வெளியே உழைத்து சோறும் போட்டு வீட்டுவேலையும் செய்து மாளும் தெய்வப்பிறவிகளை எந்தக் கணக்கில் சேர்க்க ?

சரியாகச் சொன்னால், இல்லத்தரசிகள் தங்கள் வீட்டுவேலை போக, மற்றுமொரு பணியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள எந்தத் தடையும் இல்லையே... வெளியே அலுவலகப்பணிக்குதான் போகவேண்டும் என்பதில்லையே .தங்கள் தனித்திறனுக்கேற்ப - தையல், பிறர்குழந்தைபார்த்தல், தின்பண்டங்கள் செய்து தருதல், பாடம் சொல்லித்தருதல் - நூற்றுக்கணக்கான தெரிவுகள் உள்ளனவே! ஏதேனுமொன்றைச் செய்து கௌரவமாகப் பொருளீட்ட இயலுமே... அதென்னது, அரசாங்கத்திடமிருந்து 'இலவசமாக' உதவி எதிர்பார்ப்பது

வெளிவேலைக்குச் செல்லும் இலட்சக்கணக்கான பெண்களின் வரிப்பணத்திலிருந்து தான் இதைச் சுரண்ட வேண்டும். நான் இதைச் சற்றும் ஆதரிக்கவில்லை. தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். இதைச் சொல்வதால் எனக்கு எதிர்ப்பு எழும் என்று தெரிந்தேதான் சொல்கிறேன். தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்த திட்டத்தைக் கைவிடுக.

ஒருவேளை இதைச் செயல்படுத்தித்தான் தீர வேண்டுமெனில், அந்த பணத்துக்கு ஈடான உழைப்பை அவர்களிடமிருந்து பெற்று விட்டு வழங்குக.

இவ்வாறு தாமரை எழுதியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (26) கருத்தைப் பதிவு செய்ய
என்னை விட காதல் செய்ய முடியாது : இளையராஜாஎன்னை விட காதல் செய்ய முடியாது : ... இரிடியம் மோசடி கும்பலிடம் ரூ.1.81 கோடியை இழந்த விக்னேஷ் இரிடியம் மோசடி கும்பலிடம் ரூ.1.81 ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (26)

VIDHURAN - chennai,இந்தியா
25 மார், 2022 - 07:27 Report Abuse
VIDHURAN மக்களின் முயற்சியை ஊக்குவிக்காமல், ஊனமாக்கும் எண்ணம் கொண்ட அரசு இப்படித்தானே செய்யும். முதல் முதலாக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இந்த நாள் வரை இலவசம், மானியம், "சும்மா" ஓட்டுக்கு பணம், சலுகை மற்றும் கூலி இப்படி எல்லாவற்றையும் சீரழித்த கழகங்கள் எல்லாவற்றிற்கும் ஒரு நியாயம் கற்பிப்பது அனைவரும் அறிந்ததே அறிவு ஜீவிகள் கூட இதை வரவேற்பதும், நிர்பந்திப்பதும் மக்களின் தரத்தை பிரதிபலிக்கிறது. குழந்தைகளை வளர்க்கும்போது "யாரவது எதையாவது இலவசமாகவோ, பரிசாகவோ காரணமின்றி கொடுத்தால் வாங்கக்கூடாது" என்று சொல்லி வளர்க்கும் பெற்றோரே, ரேஷன் கடையிலும் அரசு அலுவகங்களிலும் இலவசங்களுக்கு வரிசையில் நின்று தங்களை தாங்களே தாழ்த்திக்கொள்ளும் நிலை என்று தான் மாறுமோ? ஆள்பவர்கள் காக்கட்டும். ஆண்டவனால் முடியாது
Rate this:
yavarum kelir - yadhum vore ,இந்தியா
23 மார், 2022 - 17:51 Report Abuse
yavarum kelir தமிழ் குடும்ப பெண்களை சீரழிக்க உலக்கை நாயகனின் உள்ளத்தில் உதித்த உன்னதமான உணர்வுக்கு தாமரை அவர்களின் சவுக்கடி.
Rate this:
DVRR - Kolkata,இந்தியா
23 மார், 2022 - 17:14 Report Abuse
DVRR அறிவிலி அறிவிப்பு என்பதை மிக அழகாக விளக்கியுள்ளது அருமையிலும் அருமை
Rate this:
S.Baliah Seer - Chennai,இந்தியா
23 மார், 2022 - 12:44 Report Abuse
S.Baliah Seer தாமரையின் தெளிவான கருத்துக்கள் பாராட்டப்பட வேண்டியவை. பழங்காலத்தில் திரைகடல் ஒடி திரவியம் தேடியவர்கள் மக்களின் நலனுக்காக சாலைகள், சத்திரங்கள் அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் அரசியல்வாதிகள் எல்லாவற்றையும் சுரண்டி தங்கள் நலனுக்கு பங்களாக்களை அமைத்துக்கொண்டு அதை மறைக்க கொஞ்ச நஞ்சம் இருக்கும் மக்கள் பணத்தையும் இலவசத்துக்காக வாரி இறைத்தனர். நீதி மன்றங்கள் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்று ஒதுங்கிக் கொண்டன. இதனால் மக்களின் அடிப்படை சுகாதாரம் கூட இல்லை. எங்கும் கொசுவும், சாக்கடையும் கந்தலானாலும் கசக்கிக்கட்டு,கூழானாலும் குளித்துக் குடி போன்ற ஆரோக்கிய நிலைகள் மக்கள் மனதில் இல்லை.
Rate this:
THENNAVAN - CHENNAI,இந்தியா
23 மார், 2022 - 12:34 Report Abuse
THENNAVAN கருத்து சொல்வதற்கும் ஒரு தகுதி வேணும் .......
Rate this:
mei - கடற்கரை நகரம்,மயோட்
23 மார், 2022 - 15:36Report Abuse
meiஓ நீ அவனா? வூட்ல ஒக்காந்து பொஞ்சாதி பணத்தில துன்னுட்டு இருக்கியா?...
Rate this:
மேலும் 20 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Varisu
  • வாரிசு
  • நடிகர் : விஜய்
  • நடிகை : ராஷ்மிகா மந்தனா
  • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
  Tamil New Film Coffee with Kadhal
  • காபி வித் காதல்
  • நடிகர் : ஜீவா ,
  • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
  • இயக்குனர் :சுந்தர்.சி
  Tamil New Film Sardar
  • சர்தார்
  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ராஷி கண்ணா
  • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  dinamalar advertisement tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in