சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
நடிகர் பாக்யராஜ் - ஊர்வசி ஜோடியாக நடித்த முந்தானை முடிச்சு படத்தின் இரண்டாம் பாகம், மாப்பிள்ளை வினாயகர் என்ற பெயரில் தயாராகிறது. நகைச்சுவை மற்றும் குணச்சித்ர வேடங்களில் நடித்து வந்த ஜீவா, இந்த படத்தின் மூலம் கதாநாயகன் ஆகிறார். இவருக்கு ஜோடியாக ரஷ்மி கவுதம் நடிக்கிறார். பாக்யராஜ், ஊர்வசி இருவரும் ஜீவாவின் பெற்றோர்களாக நடிக்கிறார்கள். பாண்டியராஜன், சந்தானம் இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். டூ படத்தை இயக்கிய ஸ்ரீராம் பத்மநாபன், இந்த படத்தை டைரக்ட் செய்கிறார். ரமேஷ் தயாரிக்கிறார். சி.ஆர்.மாறவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அபிஷேக் இசையமைக்கிறார். பாடல்களை கவிஞர் வாலி, நா.முத்துக்குமார் ஆகிய இருவரும் எழுதியிருக்கிறார்கள். படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெறுகிறது.