'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
மலையாள திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான துல்கர் சல்மான் சினிமாவுக்குள் நுழைந்து பத்து வருடங்களை கடந்து விட்டார். முதல் ஐந்து வருடங்கள் மலையாள திரையுலகில் மட்டும் கவனம் செலுத்தியவர் அதன்பிறகு தமிழில் நுழைந்து அப்படியே தெலுங்கு, அதன்பிறகு பாலிவுட் என கிட்டத்தட்ட பான் இந்தியா நடிகராகவே மாறிவிட்டார். ஆனால் அப்படிப்பட்டவருக்கு ஒரு மொழியில் அவர்களுக்குரிய கலாச்சாரத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் படத்தை பான் இந்தியா ரிலீஸ் என்று சொல்லி வெளியிடுவதில் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை என சமீபத்தில் தேசிய சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, "பான் இந்தியா என்கிற வார்த்தை உண்மையிலேயே என்னை எரிச்சல் அடைய வைக்கிறது. இந்த வார்த்தையை கேட்பதற்கு கூட நான் விரும்பவில்லை. சினிமாவில் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொரு மொழியிலும் சென்று தங்களது திறமைகளை பரிமாறி கொள்ளட்டும்.. அது வரவேற்கத்தக்கது. ஆனால் நாமெல்லாம் ஒரே நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்க திரைப்படங்கள் எப்போதாவது பான் அமெரிக்கா என்று சொல்வதுண்டா ? நான் இதுவரை அப்படி கேட்டதும் இல்லை.
தற்போது இந்தியா முழுவதும் பயணிக்கின்ற பான் இந்திய படம் என சொல்லப்படுகின்ற படம் நிச்சயம் அனைத்து மொழிகளுக்கும் ஆன படமாக எடுக்கப்படுவதில்லை. பான் இந்தியா படம் என்கிற ஒன்றை நாம் கட்டமைக்க முடியாது. அப்படி வெளியாகும் படங்கள் எல்லாம் குறிப்பிட்ட ஒரு மார்க்கெட்டை மையப்படுத்தி மட்டுமே எடுக்கப்பட்டவை ஒரே மார்க்கெட்டுகாக எடுக்கப்பட்டிருந்தாலும் எந்த ஊருக்கும் பொருந்தும் என்கிற ஒரு கதையை. எல்லா ஊர்களிலும் ரிலீஸ் செய்தால் அதுதான் இந்தியா படம்" என்று கூறியுள்ளார் துல்கர் சல்மான். பான் இந்திய படங்கள் மீது அவருக்கு என்ன அவ்வளவு கோபமோ தெரியவில்லை.