வெற்றி மட்டுமே பேசப்படும்: இது திரிஷா தத்துவம் | ரஜினி 50வது ஆண்டில் 2 படங்கள்: ஆயிரம் கோடியை அள்ளவும் பிளான் | 'குபேரா'வில் 'சமீரா' பற்றி ராஷ்மிகா மந்தனா நீளமான பதிவு | படத்தில் நடிக்கும் அனைவருக்கும் 'ஸ்கிரிப்ட்' கொடுக்க வேண்டும்: விக்ரம் பிரபு வேண்டுகோள் | நாயகியான செய்தி வாசிப்பாளர் | புதிய கதையில் வெளிவரும் 'ஜூராசிக் பார்க்' | பிளாஷ்பேக்: விஜயகாந்த் படத்தில் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா | பிளாஷ்பேக்: எம்ஜிஆரை வாடா, போடா என்று அழைத்த ஒரே இயக்குனர் | 'குபேரா' முதல் நாள் வசூல்: முதற்கட்டத் தகவல் | 'ஆர்ஜேபி' என பெயரை சுருக்கிய ஆர்ஜே பாலாஜி |
நடிகர் கார்த்திக்கின் மகனாக மறைந்த நடிகர் முத்துராமனின் பேரனாக மூன்றாம் தலைமுறை நடிகராக சினிமாவில் மணிரத்னம் இயக்கிய கடல் படம் மூலம் அறிமுகமானவர் கவுதம் கார்த்திக். சீரான இடைவெளியில் படங்களில் நடித்துவரும் கவுதம் கார்த்திக் கடந்த இரண்டாயிரத்து பதினெட்டில் முத்தையா இயக்கத்தில் தேவராட்டம் என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் மலையாள நடிகை மஞ்சிமா மோகன். அந்த படத்தில் நடித்ததில் இருந்து இருவரும் நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர். அப்போது அவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளதாக சொல்லப்பட்டு வந்தது.
இந்த நிலையில் மஞ்சிமா மோகன் தனது பிறந்தநாள் அன்று பலரும் அவருக்கு வாழ்த்து கூறிய நிலையில் கவுதம் கார்த்திக் கூறிய வாழ்த்து மட்டும் சற்றே வித்தியாசமாக இருந்தது. குறிப்பாக மஞ்சிமா மோகனை அவர் மோமோ என குறிப்பிட்டு தனது வாழ்த்தை தெரிவித்து இருந்தார். ‛இந்த வாழ்வில் இதுநாள் வரை நான் பெற்ற அதிலேயே பெருமைப்படக்கூடிய விஷயமாக ஒன்று இருந்தது என்றால் என்னுடைய வாழ்க்கையில் உன்னை போன்ற ஒருவர் இருப்பதுதான்' என்று கூறி தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதன்மூலம் கவுதம் கார்த்திக் மஞ்சிமா உடனான தனது காதலை உறுதிப்படுத்தியுள்ளார் என்று சோசியல் மீடியாவில் பலரும் பேசிக் கொள்கின்றனர்.