காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திரைப்பட தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திற்கும், பெப்சிக்கும் இடையில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. அதன் அடிப்படையில் நேற்று சம்பள உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.10 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை சம்பள உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்சி) இடையே புதிய ஊதிய உயர்வு தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. இதில் சுமூக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்றுமுன்தினம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
இந்த புதிய ஊதிய உயர்வு 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். தயாரிப்பாளர்கள் அனைவரும் புதிய புரிந்துணர்வு ஒப்பந்த வழிகாட்டுதல் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ள சம்பள தொகையினை மட்டுமே படப்பிடிப்பின்போது அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.