நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் |
தியேட்டர்களில் திரைப்படங்களைப் பார்ப்பது ரசிகர்களுக்கு ஒரு தனி ரசனை. ஒரு காலத்தில் '70 எம்எம்' ஸ்கிரீன்களில் வெளியாகும் படங்களை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருந்தது. தற்போது அந்த இடத்தை 'ஐமேக்ஸ்' தியேட்டர்கள் பிடித்துவிட்டது.
ஐமேக்ஸ் தியேட்டர்களுக்கான ஸ்கிரீன் அளவு 52 அடி உயரமும் 72 அடி அகலமும் இருக்கும். அரை வட்ட வடிவில் இருக்கும் அந்தத் திரையில் தியேட்டர்களில் அமர்ந்து படங்களை ரசிப்பது ஒரு பிரம்மாண்டமான ரசனையைத் தரும்.
பல ஹாலிவுட் படங்கள் அமெரிக்கா உள்ளிட்ட பெரிய நாடுகளில் ஐமேக்ஸ் தியேட்டர்களில் வெளியிடப்படுவதை வழக்கமாக வைத்திருக்கின்றன. இந்தியாவில் தயாராகும் சில படங்களை இப்படி ஐமேக்ஸ் முறையில் வெளியிட ஆரம்பித்துள்ளார்கள்.
ராஜமவுலி இயக்கத்தில், ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் மற்றும் பலர் நடிக்க வரும் மார்ச் 25ம் தேதி வெளியாக உள்ள 'ஆர்ஆர்ஆர்' படத்தை 'ஐமேக்ஸ் ரீமாஸ்டர்' முறையிலும் வெளியிடுகிறார்கள். 'ரீமாஸ்டர்' என்பது ஏற்கெனவே உருவாக்கி வைத்திருந்ததை மேலும் தரம் உயர்த்தி வெளியிடுவதாகும்.
'ஆர்ஆர்ஆர்' படம் ஜனவரி 7ம் தேதியே வெளியாகி இருக்க வேண்டியது. கொரோனா ஒமிக்ரான் அலையால் படத்தைத் தள்ளி வைத்தார்கள். இந்த இடைப்பட்ட காலத்தில் ரீமாஸ்டரிங் வேலைகள் நடந்துள்ளதாகத் தெரிகிறது. ஐமேக்ஸ் தியேட்டர்களில் படம் பார்க்க இரு மடங்கு கட்டணத்தை ரசிகர்கள் தர வேண்டும்.