டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் நடித்து தனக்காக சில பல கோடி ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்த கன்னட நடிகையான ராஷ்மிகா மந்தனா தற்போது ஹிந்தியிலும் பிஸியாக நடித்து வருகிறார்.
கர்நாடக மாநிலத்தின் மலைப் பிரதேசமான கூர்க் நகரை சொந்த ஊராகக் கொண்டவர் ராஷ்மிகா. காபி எஸ்டேட்டுகள் அதிகம் உள்ள கூர்க் பகுதியின் பெண்கள் அணியும் பாரம்பரிய சேலை ஸ்டைலுக்கு “கொடவா' சேலைகள்'' என்று பெயர்.
அந்தப் பாணியில் சேலை அணிந்த இரண்டு புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் நேற்று பகிர்ந்திருந்தார் ராஷ்மிகா. அந்தப் பதிவிற்கு 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் அவருக்குக் கிடைத்துள்ளன. ராஷ்மிகா கிளாமராக ஆடை அணிந்த புகைப்படங்களுக்குக் கூட வழக்கமாக 20 லட்சம் லைக்குகள்தான் கிடைக்கும். ஆனால், அவர் சேலை அணிந்த புகைப்படங்களுக்கு அதை விட அதிகமான லைக்குகளை வாங்குகிறார்.
இன்ஸ்டாவில், தற்போது 29.3 மில்லியன் பாலோயர்களை வைத்திருக்கும் ராஷ்மிகா, விரைவில் 30 மில்லியன் பாலோயர்களை தொடப் போகிறார் என்பது கூடுதல் தகவல்.