மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து அஜித்தின் 61வது படத்தையும் வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்திற்கான பிரம்மாண்டமான அண்ணாசாலை செட் அமைக்கும் பணிகள் ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பூஜை மார்ச் 9ஆம் தேதி தொடங்கி மார்ச் 18-ம் தேதி படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் படத்தின் தலைப்பினை பூஜை அன்று வெளியிடப்போவதாக கூறப்படுகிறது. அதோடு சமீபகாலமாக வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என வி என்ற எழுத்தில் தொடங்கும் தலைப்புகளாக தனது படத்துக்கு வைத்து வரும் அஜித், இந்த படத்திற்கும் அதே வி சென்டிமெட்டில் வல்லமை என்ற டைட்டிலை வைப்பதற்கு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடிக்க உள்ளார். அதில் ஒருவேடம் வில்லன் மாதிரியான தோற்றம் கொண்டது.