'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை, சேட்டை, இவன் தந்திரன், தள்ளிப்போகாதே போன்ற படங்களை இயக்கியவர் ஆர்.கண்ணன். தற்போது காசேதான் கடவுளடா, கிரேட் இந்தியன் கிச்சன் படங்களை இயக்கி முடித்துள்ளார். இந்த இரு படங்களும் விரைவில் வெளியாக உள்ளன. அடுத்தபடியாக சயின்பிக்சன், பேண்டஸி வகையில் காமெடி ஹாரர் படத்தை இயக்குகிறார். இப்படத்தில் நாயகியாக ஹன்சிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார்.
ஹன்சிகா மோத்வானி இப்படத்தில் நேத்ரா எனும் இளம் அறிவியல் விஞ்ஞானி பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்காக சென்னை ஈசிஆர்-ல் ஒரு பிரமாண்டமான சயின்ஸ் லேப் ஒன்றை பெரும் பொருட்செலவில் அமைக்கிறார்கள். அதோடு படத்தில் தலை சிறந்த அனிமேஷன் கம்பெனியும் பணியாற்ற உள்ளனர்.
படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இப்படம் பூஜையுடன் ஆரம்பமானது. தமிழ் சினிமாவுக்கு புதியதாகவும், ரசிகர்களுக்கு புத்தம் புது அனுபவமாகவும் இப்படம் இருக்கும் என்கிறார் கண்ணன்.