அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

சின்னத்திரை ஜோடிகளில் அதிக ரசிகர்களை கொண்ட ஜோடி என்றால் அது சித்து - ஸ்ரேயா அஞ்சன் ஜோடி தான். சீரியலில் மட்டும் அல்ல நிஜத்திலுமே இருவருக்குமிடையேயான புரிதலும், காதலும் கவித்துவமானது. அதற்காகவே இவர்களை அதிக நபர்கள் சோஷியல் மீடியாக்களில் பின் தொடர்ந்து வருகிறார்கள். திருமணத்துக்கு பிறகும் கணவனும், மனைவியும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வருகிறார்கள். எனினும், இவர்கள் இருவரும் மீண்டும் சேர்ந்து நடிப்பது எப்போது என ரசிகர்களும் ஒருபுறம் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.
சித்து - ஸ்ரேயா தம்பதியினர் தங்கள் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை ரசிகர்களுடன் சோஷியல் மீடியா மற்றும் யூ-டியூப் சேனல் வழியே பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் சித்து - ஸ்ரேயா ஜோடி தற்போது புதிதாக கார் வாங்கியுள்ளனர். அதை பதிவிட்டு தங்கள் மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளனர். அவர்களுக்கு தற்போது சக நடிகர்களும், ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்