மீண்டும் சிவகார்த்திகேயனிடம் கதை சொன்ன ஏ.ஆர்.முருகதாஸ் | பைசன் படத்தின் 2வது பாடல் வெளியானது | ‛யாத்திசை' இயக்குனருடன் இணையும் ரவி மோகன் | பிளாஷ்பேக்: பாலுமகேந்திரா ஓவியமாய் தீட்டிய முதல் திரைக்காவியம் “கோகிலா” | அக். 10ல் ஒளிபரப்பாகும் ‛வேடுவன்' வெப் தொடர் | மதராஸி ஓடிடி வெளியீடு எப்போது | சிம்புதேவன் இயக்கத்தில் விமல்? | 21 ஆண்டுகளுக்குப் பிறகு ரீ-ரிலீஸ் ஆகும் அட்டகாசம் | ‛சூர்யா 46' படத்தின் ஓடிடி உரிமம் இத்தனை கோடியா? | வேறொருவரை வைத்து தெலுங்கு டப்பிங்: 'கிஸ்' இயக்குனர் மீது விடிவி கணேஷ் அதிருப்தி |
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் சென்னையில் இன்று(பிப்., 27) நடந்தது. இந்த தேர்தலில் கே.பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியினரும், ஆர்.கே.செல்வமணி தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிட்டனர். இயக்குனர் சங்கத்தில் மொத்தம் 2600 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுபோடும் உறுப்பினர்களாக 1900பேர் உள்ளனர். இன்று நடந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் 100 சேர்த்து 1520 ஓட்டுகள் பதிவாகின. செந்தில்நாதன் தலைமையில் நடந்த இந்த தேர்தல் தகுந்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது. காலையில் துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவடைந்தது. ஓட்டு எண்ணிக்கை இன்று மாலையே எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.