ஸ்பெயின் கால்பந்தாட்ட மைதானத்தில் வெளியிடப்பட்ட டொவினோ தாமஸ், நஸ்ரியா பட டைட்டில் | 'வாழ' இயக்குனரின் இயக்கத்தில் மஞ்சு வாரியர் நடிக்கும் 'ஹேப்பி லூப்' | ‛கிருஷ்ணாவதாரம்' படத்திற்கு உ.பி.,யில் வரிவிலக்கு அளித்த முதல்வர் யோகி ஆதித்யநாத் | காஞ்சனா 4 படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | மீண்டும் தெலுங்கு படத்தில் யோகி பாபு | ராமாயணா படத்தில் சாய் பல்லவியின் சம்பளம் எவ்வளவு? | மே 18ல் ராம்சரணின் 'பெத்தி' டிரைலர் வெளியீடு | ஏமாற்றம் தந்த ஏப்ரல் மாதம் | 'எல்ஐகே' 200 கோடி வசூலிக்கும் என எதிர்பார்த்தேன் : விக்னேஷ் சிவன் ஆதங்கம் | மீண்டும் வருகிறது 'மணி ஹெய்ஸ்ட்' |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான தோனி நடித்துள்ள அதர்வா: தி ஆர்ஜின் என்கிற கிராபிக்ஸ் நாவலை ரஜினிகாந்த் வெளியிட்டார்.
இது குறித்து எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணி கூறியதாவது: ரஜினி சார் எங்களின் உழைப்பை அங்கீகரித்து, முதல் பிரதியை வெளியிட்டது, உற்சாகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அதர்வா எனது முதல் புத்தகம் என்றாலும், எனக்குப் பிடித்த நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது.
தோனி என் மீதும், என் கதையின் மீதும் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் புத்தகம் குறித்த பயணத்தில் என்னுடன் நெருக்கமாக பணியாற்றிய விதம் ஆகியவற்றிற்காக நான் அவருக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அதர்வா எனும் இந்த புதிய மாய உலகின் புதிய கதைசொல்லல் முறையை வாசகர்கள் கொண்டாடுவதை காண ஆவலாக காத்திருக்கிறோம். என்றார்.




