ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
கப்பலில் ஒன்றாக பணியாற்றிய விக்னேஷ்வரன், கோபிநாத் மற்றும் சுந்தர் ஆகியோர் சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, கப்பலில் பணியாற்றி சம்பாதித்த பணத்தை வைத்து திரைப்படம் ஒன்றை தயாரித்து, இயக்கி, நடித்திருக்கிறார்கள்.
படத்தை விக்னேஷ்வரன் இயக்க, சுந்தர் மற்றும் கோபிநாத் நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். அப்ரினா, இலக்கியா, ஹரிணி ஹீரோயின்கள் சிவநாத் ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எக்ஸ்.பி.ஆர் இசையமைத்திருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் விக்னேஷ்வரன் கூறியதாவது: கப்பல் பணியில் சேர்ந்த போது, அங்கே இருந்த சுந்தர் மற்றும் கோபிநாத் ஆகியோரும் என்னை போலவே சினிமா மீது ஆர்வமாக இருந்ததால் நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து பல குறும்படங்களை எடுத்தோம். ஒரு கட்டத்தில் குறும்படங்கள் எடுத்தது போதும், திரைப்படம் எடுக்கலாம் என்று மூன்று பேரும் முடிவு செய்தோம்.
சரக்கு என்றாலே மதுபானம் என்ற கண்ணோட்டத்தில் பலர் பார்க்கிறார்கள். ஆனால், நாங்கள் இங்கு குறிப்பிட்ட சரக்கு மதுபானம் அல்ல, அது வேறு ஒன்று. அது என்ன? என்பதை இப்போதைக்கு சொல்ல முடியாது. காரணம் அது தான் கதையின் மையப்புள்ளி.
குஜராத்தில் தொடங்கும் கதை தமிழகத்தில் முடிவடையும். இது தான் பாரின் சரக்கு படத்தின் கதைச் சுருக்கம். அந்த சரக்கு என்ன, அதற்கும் குஜராத்துக்கும் என்ன தொடர்பு என்பதை வித்தியாசமான திரைக்கதை அமைப்போடு இப்படத்தை உருவாக்கியிருக்கிறோம். ஆக்ஷன் சஸ்பென்ஸ் ஜானர் திரைப்படமாக இருந்தாலும், இதுவரை திரையில் சொல்லப்படாத ஒரு விஷயத்தை சொல்லும் படமாகவும் இருக்கும். என்றார்.