நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

திரிஷ்யம், த்ரிஷ்யம்-2 என இரண்டு படங்களின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப்.. திரிஷ்யம்-2 படத்தை முடித்த பின்னர் அதற்கடுத்ததாக தெலுங்கிலும் த்ரிஷ்யம்-2 படத்தை ரீமேக் செய்து இயக்கினார்.. மீண்டும் மோகன்லாலை வைத்து ட்வல்த் மேன் என்கிற படத்தையும் இயக்கி முடித்து ரிலீஸுக்கும் தயார்நிலையில் வைத்துவிட்டார் ஜீத்து ஜோசப்.
அதேசமயம் ஏற்கனவே மோகன்லால், திரிஷா நடிப்பில் ஆரம்பித்த ராம் படத்தை தற்போதுள்ள சூழ்நிலையில் வெளிநாட்டில் படமாக்க இயலாது என்பதால் தற்சமயம் கிடப்பில் போட்டுவிட்டார். இந்தநிலையில் தற்போது மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி என்பவரை ஹீரோவாக வைத்து கூமன் என்கிற படத்தை இயக்குகிறார் ஜீத்து ஜோசப். ஆக்சன் படமாக உருவாகும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது.