காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? |

சுசீந்திரன் இயக்கத்தில் கிராமத்து கதைக்களத்தில் ஜெய் நடித்து, இசையமைத்து தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் வீரபாண்டியபுரம். இந்த படத்திற்கு பிறகு மீண்டும் ஜெய்யை வைத்து புதிய படத்தை இயக்கவிருப்பதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது : "எனது இயக்ககத்தில் ஜெய் நடிப்பில் வெளியான வீரபாண்டியபுரம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை ஜெய் சிங்கிள் ஹீரோவாக நடித்து ஓடவில்லை என பலர் கூறியுள்ளனர். ஆனால் ராஜா ராணி, சென்னை 28, எங்கேயும் எப்போதும் போன்ற படங்கள் மட்டுமே ஓடின. இதை உடைத்திருக்கிறது வீரபாண்டியபும் திரைப்படம் . ஜெய்யும், நானும் மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்திற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும்".
இவ்வாறு தெரிவித்துள்ளார்