'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை காஜல் அகர்வால் கடந்த வருடம், தனது காதலரான கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார். கடந்த வருடம் தனது காதலர் தினத்தை பொள்ளாச்சியில் ஒரு சாதாரண சாலையோர உணவகத்தில் கொண்டாடி அந்த புகைப்படங்களை பதிவிட்டிருந்தார்.
இந்தநிலையில் இன்று காதலர் தினத்தை முன்னிட்டு தனது கணவரின் மேல் தனது கால்களை போட்டபடி அன்யோன்யமாக அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துகொண்டுள்ள காஜல் அகர்வால், 'இந்த அழகனை அவரது பிழைகள் பொறுத்து 2012லிருந்து காதலித்து வருகிறேன்.. ஹேப்பி காதலர் தினம்” என கூறியுள்ளார்.
பொதுவாக நடிகைகளின் காதல் எதோ ஒரு விதத்தில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள்ளாகவே மீடியாவில் கசிந்து விடும்.. நயன்தாரா, சமந்தா, அமலாபால் ஆகியோரின் காதல் விஷயம் எல்லாம் அப்படி உடனே வெளியானவை தான்.. ஆனால் முன்னணி நடிகையாக வலம் வந்தபோதும் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக, அதாவது தனது திருமண அறிவிப்பை வெளியிடும் வரை தனது காதல் குறித்த ரகசியத்தை காஜல் அகர்வால் கட்டிக்காத்து வந்துள்ளார் என்பது ஆச்சர்யமான விஷயம் தான்.