காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் |
கன்னடத் திரையுலகின் பவர் ஸ்டார் என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் புனித் ராஜ்குமார். கடந்த வருடம் அக்டோபர் மாதம் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு இந்தியத் திரையுலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
புனித் ராஜ்குமார் நாயகனாக நடித்த 'ஜேம்ஸ்' படத்தின் டீசரை இன்று யு டியுபில் வெளியிட்டுள்ளனர். சேதன் குமார் இயக்கத்தில் சரண்ராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் கதாநாயகியாக பிரியா ஆனந்த் நடித்துள்ளார். சரத்குமார், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ஒரு ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படம் மார்ச் 17ம் தேதி கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பான்--இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்தப் படம் வெளியாகும் தினத்தில் வேறு எந்த கன்னடப் படத்தையும் வெளியிடப் போவதில்லை என கன்னடத் திரையுலகத்தினர் முடிவெடுத்துள்ளனர்.
புனித் ராஜ்குமார் மறைவுக்குப் பின் வெளிவரும் படம் என்பதால் இப்படத்தைப் பார்க்க அவரது ரசிகர்களும், ராஜ்குமார் குடும்பத்து ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.