இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

வினோத் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், அஜித்குமார், ஹுமா குரேஷி, கார்த்திகேயா மற்றும் பலர் நடிக்கும் படம் 'வலிமை'. பிப்ரவரி 24ம் தேதி இப்படம் தமிழில் மட்டுமல்லாது, ஹிந்தி, கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. அந்த மொழி டிரைலர்களை நேற்று யு டியுபில் வெளியிட்டார்கள்.
அஜித் நடித்த ஒரு படம் இத்தனை மொழிகளில் ஒரே நாளில் வெளியாவது இதுவே முதல் முறை. தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் அஜித்திற்கு மற்ற மொழிகளில் எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கப் போகிறது என்பது 'வலிமை' படம் வெளிவந்த பிறகே தெரியும். ஆனால், அதற்கு முன்னோட்டமாக டிரைலருக்குக் கிடைத்துள்ள வரவேற்பைப் பொறுத்தும் ஓரளவிற்கு யூகிக்கலாம்.
படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் என்பதால் மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகர்கள்தான் நேற்று இந்த டிரைலரை வெளியிட்டார்கள். ஹிந்தி டிரைலரை அஜய் தேவகன், கன்னட டிரைலரை சுதீப், தெலுங்கு டிரைலரை மகேஷ்பாபு ஆகியோர் நேற்று மாலை வெளியிட்டார்கள்.
ஹிந்தி டிரைலருக்கு இதுவரையிலும் 14 லட்சம் பார்வைகளும், தெலுங்கு டிரைலருக்கு 9 லட்சம் பார்வைகளும், கன்னட டிரைலருக்கு 2 லட்சம் பார்வைகளும் கிடைத்துள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு வெளியான தமிழ் டிரைலருக்கு இதுவரையில் 1 கோடியே 91 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளன.




