கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம் வீரபாண்டியபுரம். ஜெய்யுடன் மீனாட்சி கோவிந்தராஜன், சந்த்ரு, சரத், ஜேபி, காளி வெங்கட், பால சரவணன், முத்துகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு நடிகர் ஜெய் இசை அமைத்துள்ளார். பாடல் வெளியீட்டு விழாவில் தான் இசை அமைப்பாளர் ஆனது எப்படி என்பது குறித்து பேசினார்.
அவர் கூறியதாவது: எனக்கு இசை எங்கிருந்து வந்தது என கேட்டு விடாதீர்கள். 2012 லிருந்தே மியூசிக் கற்றுக்கோண்டேன். ஒரு இசை ஆல்பத்துக்காக பாடல்களை தயார் செய்தேன். அதில் ஒரு பாடலை மிக்ஸிங் செய்து கொண்டிருந்தபொது சுசீந்திரன் கேட்டுவிட்டு யார் மியூசிக் என்றார், நான் தான் இசையமைத்தேன் என்றேன். அவர் ஆச்சரயப்பட்டு பாராட்டினார்.
திடீரென்று இந்தப்படத்திற்கு இசையமையுங்கள் என்று சொன்ன போது முதலில் பிராங்க் செய்கிறார் என்று நினைத்தேன். சீரியஸாக சொன்னார். கொஞ்சம் தயக்கமாக இருந்தது, ஆனால் சுசீந்திரன் என்னை நம்பினார். இப்போது படத்தை முடித்து விட்டு பார்க்கும்போது என்னாலும் இசையமைக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது. நான் இசை கற்றுக்கொண்டதற்கு என் குடும்பம் தான் காரணம். என் குடும்பத்திற்கு நன்றி.
இவ்வாறு ஜெய் பேசினார்.