வந்தாச்சு ‛விஜய் 67' அப்டேட் : ரசிகர்கள் குஷி, இந்தவாரம் முழுக்க கொண்டாட்டம் தான் | அதிரடியில் மிரட்டும் நானியின் "தசரா" டீசர் | தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் |
தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான ரவிதேஜா நடித்துள்ள கில்லாடி என்கிற படம் வரும் பிப்-11ஆம் தேதி வெளியாக இருக்கிறது.. கடந்த வருடம் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்த சமயத்தில் வெளியான அவரது கிராக் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தவகையில் இந்த கில்லாடி படத்தின் வெற்றியையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார் ரவிதேஜா.
அதேசமயம் அதே பிப்-11ஆம் தேதி விஷ்ணு விஷால் நடித்துள்ள எப்ஐஆர் படமும் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகிறது. இதில் ஆச்சர்யம் என்னவென்றால் இந்த எப்ஐஆர் படத்தை தெலுங்கில் வெளியிடுபவரும் ரவிதேஜா தான். ஒரே நாளில் தனது படத்தையும் தான் வெளியிடும் படத்தையும் ரிலீஸ் செய்வது ரவிதேஜாவின் துணிச்சலா இல்லை பெருந்தன்மையா..?. இல்லை இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெரும் என்கிற நம்பிக்கையா..? வெள்ளிக்கிழமை விடை தெரிந்துவிடும்.