ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

தெலுங்கு சினிமாவின் சீனியர் ஹீரோவான பாலகிருஷ்ணா சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாலும் சின்னத்திரையில் அன்ஸ்டாப்பபிள் என்கிற ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறார். இதில் திரையுலக முன்னணி நட்சத்திரங்களை பங்கேற்க செய்து அவர்களிடம் இருந்து, ரசிகர்கள் இதுவரை கேள்விப்படாத பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியே கொண்டு வருகிறார்.
அப்படி சமீபத்தில் அவரது ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்ட நடிகர் மகேஷ்பாபுவிடம் சில இயக்குனர்கள் குறித்த புகைப்படங்களை காட்டி அவர்களுடனான மகேஷ்பாபுவின் அனுபவம் குறித்து கேட்டார் பாலகிருஷ்ணா. அப்போது இயக்குனர் ஷங்கருடனான ஒரு அனுபவம் குறித்து மகேஷ்பாபு பகிர்ந்துகொண்டார்.
ஒருமுறை சென்னையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் தனது நண்பரும், இயக்குனருமான மெஹர் ரமேஷுடன் தங்களது குடும்பம் சகிதமாக காலை சிற்றுண்டி சாப்பிட்டுக்கொண்டு இருந்தார் மகேஷ்பாபு. அப்போது அவரை தேடிவந்த இரண்டு டீனேஜ் பெண்கள் அவரிடம் ஆட்டோகிராப் கேட்டுள்ளனர். ஆனால் தான் தனது குடும்பத்துடன் பெர்சனலாக வந்திருப்பதாக கூறி அவர்களுக்கு ஆட்டோகிராப் போட மறுத்துவிட்டார் மகேஷ்பாபு.
ஆனால் சிறிது நேரத்தில் தன்னிடம் ஆட்டோகிராப் கேட்டு வந்தவர்கள் இயக்குனர் ஷங்கரின் மகள்கள் என்கிற விஷயம் நண்பர் மெஹர் ரமேஷ் மூலமாக மகேஷ்பாபுவுக்கு தெரியவந்தது. உடனே அதே ஹோட்டலின் அடுத்த தளம் ஒன்றில் இருந்த ஷங்கரை நேரிலேயே தேடிச்சென்ற மகேஷ்பாபு, தனது செயலுக்காக ஷங்கரிடம் வருத்தம் தெரிவித்துள்ளார்..
ஆனால் ஷங்கரோ அந்த விஷயத்தை பாசிடிவான கண்ணோட்டத்தில் அணுகியதுடன், இதில் ஒன்றும் தவறில்லை.. தனது மகள்கள் பிரபலங்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொள்வதற்கு இது ஒரு நல்ல அனுபவமாக இருக்கும் என பெருந்தன்மையாக கூறினாராம். ஷங்கரின் எளிமையையும் பண்பினையும் கண்டு வியந்து போனேன் என அந்த நிகழ்ச்சியில் கூறியுள்ளார் மகேஷ்பாபு.