'ரெட்ரோ' : ரெமான்ஸ் படமாம், ஆக்ஷன் படம் இல்லையாம்… | ககொ ககொ - கா கா, விரைவில் ரீ ரிலீஸ் | 'தொடரும்' வரவேற்பு : மோகன்லால் அன்புப் பதிவு | நானிக்காக அனிருத் பாடிய தானு பாடல் வெளியீடு | பீனிக்ஸ் வீழான் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் | கேங்கர்ஸ் படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு? | விஜய் சேதுபதியுடன் மோதும் பஹத் பாசில் | சூர்யா 46வது படத்தின் படப்பிடிப்பு எப்போது | இட்லி கடை படத்தின் அப்டேட் தந்த அருண் விஜய் | மதகஜராஜா ; சுந்தர் சி சொன்ன வார்த்தை பலித்துவிட்டது : சந்தானம் |
கடந்த 2017ம் ஆண்டு தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் மலையாள முன்னணி நடிகரான திலீப், அவரது கார் டிரைவர் சுனில் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் திலீப் மட்டும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாலியல் பலாத்காரத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை திலீப் பார்த்து ரசித்ததாக கூறப்பட்டது. அந்த வீடியோவை போலீசார் கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். தற்போது இந்த வீடியோ வெளியாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட நடிகை வீடியோ வெளியானது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த வீடியோ பரவுவதை தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தின் நகலை ஜனாதிபதி, பிரதமர், கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, கேரள முதல்வர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளார்.