ஆகஸ்ட் மாதமே திரைக்கு வரும் ரஜினியின் ஜெயிலர் | கண்ணீர் அஞ்சலி பேனர் உடன் நடிகர் ஜி.எம்.குமார் | காஷ்மீரில் நில அதிர்வு : சென்னை திரும்பிய விஜய் | மகனை தொடர்ந்து அப்பாவை இயக்கும் மாரி செல்வராஜ் | கிரிக்கெட் பயிற்சியில் ‛அட்டகத்தி' தினேஷ் | ஜீவா - அர்ஜுன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் | லியோ படத்தில் நடிக்கிறாரா யு-டியூப்பர் இர்பான்? | ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் இணையும் பான் இந்திய படம் | மீண்டும் கதை நாயகியான அபிராமி | டி.வி.யில் நேரடியாக வெளியாகும் ஆரி படம் |
சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் மகிமா நம்பியார். அதன்பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள், மகாமுனி, அசுரகுரு உள்பட பல படங்களில் நடித்தார். தற்போத ஜங்கரன், ஓ மை டாக், ரத்தம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
கேரளாவில் உள்ள காசரங்கோட்டில் குடும்பத்தினருடன் வசித்து வரும் மகிமா கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது: 19 நாட்களுக்கு முன் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முதல் 3 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக உடல்நிலை தேறி இப்போது நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளது. டாக்டர்கள், எனது குடும்பத்தார், நண்பர்களுக்கு நன்றி என்றார்.