பாலா அரனின் இயக்கத்தில், அறிமுக நாயகன் நிஷாந்த் நடிக்கும் ஒரு டார்க் காமெடி படம் 'பன்றிக்கு நன்றி சொல்லி'. ஹெட் மீடியா ஒர்க்ஸ் சார்பாக விக்னேஷ் செல்வராஜ் தயாரித்துள்ளார். இப்படத்திற்கு விக்னேஷ் செல்வராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுரேன் விகாஷ் இசை அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராம்-சதீஷ் மேற்கொண்டுள்ளனர். இந்த படம் வரும் பிப்ரவரி 4ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது.