ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
சமீபத்தில் வெளியான 'மாநாடு' திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா ஆகிய இருவரின் நடிப்பும் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் சிம்பு மற்றும் எஸ்ஜே சூர்யா மீண்டும் ஒரு படத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாளத்தில் 2019ம் ஆண்டு வெளிவந்து சூப்பர்ஹிட்டான டிரைவிங் லைசன்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கில் இருவரும் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. பிரித்விராஜ் மற்றும் சூரஜ் நடிப்பில் வெளியான இப்படத்தை லால் இயக்கியிருந்தார். இதைத்தொடர்ந்து இப்படத்தை தமிழில் வாலு, ஸ்கெட்ச் ஆகிய படங்களை இயக்கிய விஜய் சந்தர் இயக்கவுள்ளார். பிரித்விராஜ் கதாபாத்திரத்தில் சிம்புவும், சூரஜ் கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யாவும் நடிக்க உள்ளனர்.