'மகாராஜ்' படத்தில் சர்ச்சை காட்சியில் நடித்தது ஏன்: ஷாலினி பாண்டே விளக்கம் | தனுஷ் ஒரு மிகச் சிறந்த மனிதர்! - சொல்கிறார் ரோபோ சங்கர் | 45வது படத்தில் வக்கீலாக நடிக்கும் சூர்யா! | டிச.,18ல் ஓடிடியில் வெளியாகும் ‛கேர்ள்ஸ் வில் பி கேர்ள்ஸ்' | இயக்குனர் கே. எஸ். ரவிக்குமாரின் தாயார் மரணம்! | விடாமுயற்சி டப்பிங் பணிகளை தொடங்கிய அஜித்குமார்! | ரஜினி பிறந்த நாளில் கீர்த்தி சுரேஷ் திருமணம்! | கூலி படத்தில் இணைந்த ரெபா மோனிகா ஜான், சந்தீப் கிஷன் | பாலிவுட்டில் அறிமுகமாகும் பஹத் பாசில் | 4கே-வில் ரீ-ரிலீஸ் ஆகும் வேலையில்லா பட்டதாரி தெலுங்கு பதிப்பு |
நாகசைதன்யா - சமந்தா பிரிந்து விட்டனர். இவர்கள் பிரிவுக்கு பல்வேறு விதமான காரணங்கள் சமூகவலைதளங்களில் றெக்க கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இவர்கள் பிரிவு பற்றி நடிகர் நாகார்ஜூனா கூறியதாக ஒரு கருத்து உலா வருகிறது. அதாவது, ‛‛நடிகை சமந்தா தான் முதலில் விவாகரத்து கேட்டதாகவும், இதை கேட்டு தனது மகன் மிகவும் வருந்தினார்'' என்று அவர் கூறியதாக செய்தி பரவியது. ஆனால் இதை நாகார்ஜூனா மறுத்துள்ளார்.
நாகார்ஜூனா கூறுகையில், ‛சமந்தா மற்றும் நாகசைதன்யா பற்றிய எனது அறிக்கையை மேற்கோள்காட்டி சமூக ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்களில் வரும் செய்தி முற்றிலும் தவறானது; முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடக நண்பர்களை கேட்டுக்கொள்கிறேன்' எனக்கூறியுள்ளார்.