ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மென்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள படம் மஹா. ஹன்ஷிகா மோத்வானி சோலோ ஹீரோயினாக நடித்துள்ளார். இது அவருக்கு 50வது படம். சிலம்பரசன் கவுரவ பாத்திரமொன்றில் தோன்றுகிறார். ஶ்ரீகாந்த், கருணாகரன், தம்பி ராமையா, பேபி மானஸ்வி உள்பட பலர் நடித்துள்ளனர். யு.ஆர்.ஜமீல் இயக்கி உள்ளார்.
இந்த படம் தயாராகி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகியும் இன்னும் வெளியாகவில்லை. சில காரணங்களால் படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் படம் தியேட்டரில்தான் வெளிவரும். வெளியீட்டு உரிமமும் விற்கப்பட்டு விட்டது. என்று தயாரிப்பு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பு தரப்பில் இருந்து வெளியிடப்பட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை, ஆன்ஸ்கை நிறுவனம் பெற்றுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.