‛குட் பேட் அக்லி' படத்தை விட்டு வெளியேறிய தேவி ஸ்ரீ பிரசாத்! | தனுஷ் படத்தில் இணைந்த பவி டீச்சர்! | நான் உயிரோடு உள்ளவரை புதுப்பேட்டை 2 முயற்சி தொடரும் - செல்வராகவன்! | பிள்ளையார்சுழி போட்ட பிரேமி: மனம் திறந்த பிரியதர்ஷினி | நயன்தாராவிற்கு ஆதரவு அளித்தது ஏன்? - நடிகை பார்வதி விளக்கம்! | பிளாஷ்பேக் : ஓவிய நாயகன் ஒளியின் நாயகனான பின்னணி | திரிசூலம், சூர்யவம்சம், விக்ரம் - ஞாயிறு திரைப்படங்கள் | ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது |
இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை.. ஆனால் முதன்முறையாக அந்தக்குறையை போக்கும் விதமாக உருவாகியுள்ள படம் தான் துரிதம்.
சீனிவாசன் இயக்கத்தில் ஜெகன், ஈடன் நடித்துள்ள படம் 'துரிதம்'. எல்லோருக்குமே தாங்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் சரி போலத்தான் தெரியும். அடுத்தவர்கள் பார்வையில் அது தவறாக தெரியும். இது தான் படத்தின் மையக்கரு. உண்மை சம்பவம் ஒன்றை தழுவி இந்த படம் உருவாகி உள்ளது. சாலைமார்க்கமாக 65 நாட்கள், 40 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து இந்த படத்தை எடுத்துள்ளனர்.
புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் என்பவர் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்பை நாகூரான் கவனிக்க, ஆக்சன் காட்சிகளை மணி என்பவர் வடிவமைத்துள்ளார். அதுமாட்டுமல்ல மேற்கு தொடர்ச்சி மலை பட இயக்குனர் லெனின் பாரதி இந்தப்படத்தின் இறுதிக்கட்ட பணிகளை உடனிருந்து கவனித்து மேற்பார்வை செய்து உதவியுள்ளார்.