சென்னைக்கு திரும்பிய நடிகர் விஜய் | தனுஷ் நடித்து இயக்கும் புதிய படம் | சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் டி.ராஜேந்தர் | இளையராஜா ரிகர்சலுக்கு வந்த ரஜினிகாந்த்: கைதட்டி பாடல்களை ரசித்தார் | சமந்தாவுடன் இணைந்து நடித்த படம்: மலரும் நினைவுகளை பகிர்ந்த நாகசைதன்யா | நயன்தாராவுக்கு சாப்பாடு ஊட்டிவிடும் விக்னேஷ் சிவன் | விக்ரம் பிரபு நடிக்கும் ‛ரத்தமும் சதையும்' | பேஷன் ஷோ ஸ்டைல் வாக் புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகா மோகனன் | சண்டைக் காட்சியின்போது விபத்தில் சிக்கிய விஜயதேவரகொண்டா- சமந்தா | மலையாள இசை அமைப்பாளர் காலமானார் |
2022 பிறந்ததுமே தமிழ் சினிமாவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படமாக 'வலிமை' படம் இருந்தது. அப்படம் தான் இந்த ஆண்டின் முதல் பெரிய வெளியீடாக ஜனவரி 13ம் தேதி வெளிவந்திருக்க வேண்டியது. ஆனால், கொரோனா அலை பரவல் காரணமாக படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைப்பதாக அறிவித்தனர்.
தெலுங்கில் தயாராகி பான்-இந்தியா படமாக வெளிவர உள்ள 'ஆர்ஆர்ஆர்' படமும் ஜனவரி 7ம் தேதியே வந்திருக்க வேண்டிய படம். அவ்வளவு பெரிய படத்தின் வெளியீடு பற்றி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
அதனால், 'வலிமை' படத்தின் வெளியீடு பற்றியும் சீக்கிரமே அறிவிப்பு வரும் என அஜித் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். 'ஆர்ஆர்ஆர்' படத்துடன் 'வலிமை' ஒரே தேதியில் வெளியாக வாய்ப்பில்லை. இருந்தாலும், அந்தப் படத்திற்கு முன்பாக வருமா, பின்னர் வருமா என்பதுதான் கேள்வியாக உள்ளது.
கொரோனா அலை குறைந்து மக்களை மீண்டும் தியேட்டர்களுக்கு வரவழைப்பதை 'வலிமை, ஆர்ஆர்ஆர், ராதேஷ்யாம், பீஸ்ட்' போன்ற பெரிய படங்கள்தான் செய்தாக வேண்டும். எனவே, குறித்த இடைவெளியில் இந்தப் படங்கள் வெளியாகும் வாய்ப்புகள்தான் அதிகம்.
'ஆர்ஆர்ஆர்' படம் வெளியீடு அவர்கள் அறிவித்துள்ள இரண்டு தேதிகளில் எந்த ஒரு தேதியில் வெளியாகும் என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டால் 'வலிமை' படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள்.