‛தளபதி கச்சேரி' பிளாஸ்ட் : ‛ஜனநாயகன்' முதல் பாடல் வெளியீடு | கோவா திரைப்பட விழாவிற்கு செல்லும் ‛அமரன்' | ஜெயிலர் 2 படத்தை பாலகிருஷ்ணா எதனால் நிராகரித்தார்? | சைபர் கிரைம் மோசடி - ருக்மணி வசந்த் எச்சரிக்கை செய்தி | 2026 பிப்ரவரியில் திரைக்கு வரும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் ரஜினிக்கு பாராட்டு விழா | உருவக்கேலியை ஏற்க முடியாது ; ஆதரித்தவர்களுக்கு நன்றி : கவுரி கஷன் அறிக்கை | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவை கதற வைத்த மோனிஷா உன்னி | ரிலீசுக்காக 5 வருடங்கள் காத்திருந்த படம் | லட்சுமி மேனன் மீதான ஆள்கடத்தல் வழக்கு தள்ளுபடி |

டிஜிட்டல் யுகம் வந்த பிறகு பல தளங்கள் சினிமாவுக்கு பெரிய பாதையை அமைத்து தருகின்றன. அந்தவகையில் இன்றைக்கு தமிழில் முன்னணி இயக்குனர்களாக உள்ள கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்ட பலர் குறும்படங்கள் வாயிலாக பிரபலமாகின. சமீபகாலமாக வெள்ளித்திரையில் சினிமா எடுப்பதற்கு முன் பயிற்சி பட்டறையாக இருந்து வருகிறது பத்து பதினைந்து நிமிட குறும்பட சினிமாக்கள்.
அந்த வகையில் சமீபத்தில் வெளியான "வளர்பிறை" என்ற குறும்படம் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான நிறைய விருதுகளை வாங்கி குவித்துள்ளது. இந்த வளர்பிறை குறும்படத்தை திரைப்பட விழாக்களில் பார்த்த ஒரு அமெரிக்கர் அந்த குறும்படத்தை தன் சொந்த யூட்யூப் சேனலுக்காக வாங்கி இருக்கிறார். இந்த குறும்படத்தை பட குழுவை நேரில் பாராட்டி தன் சமூகவலைதள பக்கத்தில் குறும்பட வீடியோவை வெளியிட்டார் நடிகர் விஜய்சேதுபதி.
ரமேஷ் நந்தன் இயக்கி உள்ள இந்த குறும்படம் பல சர்வதேச குறும்பட திரைப்பட விழாக்களில் பங்கேற்று கிட்டத்தட்ட 18 விருதுகளை வென்றுள்ளது.