மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் |

பிக்பாஸ் சீசன் 5 வெற்றிகரமாக நடிந்து முடிந்துள்ளது. முந்தைய சீசன்களை கம்பேர் செய்யும் போது பிக்பாஸ் சீசன் 5 ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதற்கிடையில், பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓடிடி தளத்திற்கு கொண்டு வர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான உத்தேச போட்டியாளர்கள் பட்டியல் ஒருபுறம் வெளியாகி வர, முந்தைய சீசன்களில் கலந்து கொண்ட பிரபலங்களை சந்தித்து போட்டியில் கலந்து கொள்ள பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அதில் முதல் ஆளாக ஆர்மி வைத்திருந்த நடிகை சம்மதம் தெரிவித்துட்டாராம். அவருடன், பிரபல நடிகருடனும் பேச்சுவார்த்தை நடத்திய போது, அவரோ, 'எனக்கு இப்போதான் கல்யாணம் ஆகியிருக்கு, வாழ்க்கை நல்ல போயிட்டு இருக்கு. இனி நான் பிக்பாஸூக்கு சரி பட்டு வரமாட்டேன். ஆள விடுங்க' என எஸ்கேப் ஆகிவிட்டராம். ஓடிடியில் வெளியாகவுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி மீது அதிக எதிர்பார்ப்பு உருவாகியுள்ள நிலையில், வனிதா விஜயகுமார், அனிதா சம்பத், ஜூலியானா உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.