'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழில் ரன் படத்தில் அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். அதன்பிறகு விஷாலுக்கு ஜோடியாக நடித்த சண்டக்கோழி படமும் இவருக்கு பெரிய அளவில் பெயர் பெற்று தந்தது. அதை தொடர்ந்து தமிழ், மலையாளம் என மாறிமாறி நடித்துவந்த மீரா ஜாஸ்மின், கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டு நடிப்புக்கு இடைவெளி விட்டார்.
கடைசியாக 2015ல் மீரா ஜாஸ்மின் நடித்த இரண்டு படங்கள் வெளியாகின. இந்தநிலையில் கிட்டத்தட்ட 7 வருடங்கள் கழித்து மலையாளத்தில் மீண்டும் ஜெயராம் ஜோடியாக மகள் என்கிற படத்தில் நடித்து வருகிறார் மீரா ஜாஸ்மின். இந்தநிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய கணக்கு ஒன்றை துவங்கியுள்ளார் மீரா ஜாஸ்மின்.
நம் அனைவரையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாகக் கொண்டுவரும் இந்த நடவடிக்கையை எடுப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தனது புகைப்படத்துடன் முதல் பதிவை வெளியிட்டுள்ளார் மீரா ஜாஸ்மின். இதுவரை 6௦ ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் மீரா ஜாஸ்மினை பின் தொடர ஆரம்பித்துள்ளனர்.