ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி | தமிழில் அழுத்தமாக கால் பதிக்கும் சுராஜ் | பிளாஷ்பேக்: தியாகராஜன் ஜோடியாக நடித்த ஜெயராம் மனைவி | 66 வயதில் அழகியுடன் குத்தாட்டம் போட்ட சஞ்சய் தத் | எதிர்காலத்தில் 'சைபர் விசா' எடுக்கும் நிலை வரும் : எச்சரிக்கிறார் எழுத்தாளர் கபிலன் | மேடையில் தனது சாதியைக் குறிப்பிட்ட பார்த்திபன் : அடுத்த சர்ச்சை | மே 15ல் 'கருப்பு' ரிலீஸ் ?, காத்திருப்பு முடிவுக்கு வருமா? | 98வது ஆஸ்கர் : 6 விருதுகளை குவித்த ‛ஒன் பேட்டில் ஆப்டர் அனதர்' | மார்ச் 19ல் ஒரே ஒரு ரிலீஸ் தானா ? |

தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அதிக ரசிகர்களை கவர்ந்தவர் என்றால் அது ஓவியா தான். படங்களில் கவர்ச்சியாக நடித்த போது கூட பிரபலமாகாத ஓவியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். அதன்பின் அவருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகியது. அவ்வப்போது 'நறுக்' என்று பதிவிடும் ஓவியா, தற்போதும் சென்சிடிவான டாபிக்கில் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்தப் போவதாக அன்மையில் மத்திய அரசு சட்ட மசோதா உருவாக்கியுள்ளது. இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள ஓவியா, 'பெண்ணின் திருமண வயதை உயர்த்துவது சரியான முடிவு தான். இதற்கு மனபூர்வமாக நான் ஆதரிக்கிறேன். பெண்கள் தங்களுடைய படிப்பு, கனவு, வேலை என பல விஷயங்களை தியாகம் செய்ய தேவையில்லை' என பதிவிட்டுள்ளார். ஓவியாவின் இந்த கருத்துக்கு நெட்டீசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.




