'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! | மீசைய முறுக்கு 2ம் பாகம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | மகாராஜா இரண்டாம் பாகம் உருவாகிறது! | உறவினரை ஹீரோவாக மாற்றி அழகு பார்க்கும் கார்த்திக் சுப்பராஜ்! | மூன்றாவது முறையாக இணையும் சூர்யா, பாண்டிராஜ் கூட்டணி! |

ஒரு நாள் இரவில் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தாலும் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் அனைவருக்கும் நன்கு தெரிந்த முகமாக மாறியுள்ளார் நடிகர் வருண். கிட்டத்தட்ட 12 வாரங்கள் இந்த நிகழ்ச்சியில் தாக்குப் பிடித்த வருண் போட்டியாளர்களிடமும் ரசிகர்களிடமும் எந்தவிதமான கோபத்திற்கும் வெறுப்புக்கும் ஆளாகாமல் நல்ல பெயருடன் வெளியேறினார், சமீபத்தில் கடந்த வருட பிக் பாஸ் சீசன் 4 வெற்றியாளரான நடிகர் ஆரியை சந்தித்தார் வருண்.
இந்த நிலையில் தற்போது சென்னையில் கௌதம் மேனன் - சிம்பு கூட்டணியில் நடைபெற்று வரும் வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்துள்ளார் வருண். சிம்புவுடன் வருண் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மாநாடு படத்தின் வெற்றிக்காக வாழ்த்து தெரிவிப்பதற்கு தான் வருண் வந்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம் கௌதம் மேனன் இயக்கத்தில் வருண் நடித்துள்ள ஜோஷ்வா படம் விரைவில் வெளியாக இருப்பதால் அது சம்பந்தமாகவும், மரியாதை நிமித்தமாகவும் அவரை சந்திக்க வருண் சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.




