சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

தமிழ் சினிமாவில் நடிப்புக்கு பெயர் பெற்ற இளம் நடிகைகளில் அஞ்சலியும் ஒருவர். கடந்த 2007ம் ஆண்டு ராம் இயக்கத்தில் வெளியான 'கற்றது தமிழ்' படத்தின் மூலம் அறிமுகமானவர் 'ஆனந்தி' என்ற அந்த கதாபாத்திரத்திற்காக முதல் படத்திலேயே பல விருதுகளையும் பெற்றார். அதன்பிறகு 'அங்காடி தெரு' படத்தின் மூலம் நன்கு அறிமுகத்தை பெற்றார். பின்னர் அவர் நடித்த 'எங்கேயும் எப்போதும்', 'இறைவி' பேரன்பு உள்ளிட்ட படங்கள் வெற்றிப்பெற்றன. ஆனால் சமீபகாலமாக படங்கள் எதுவும் இல்லை.
இந்நிலையில் அஞ்சலியுடன் அங்காடி தெரு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்த பிளாக் பாண்டி அஞ்சலி குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அஞ்சலியும் நானும் அங்காடித்தெரு படத்திற்கு முன்பே நல்ல நண்பர்கள். சேர்ந்து தான் நடன பயிற்சி எடுத்தோம். சமீபத்தில் ஒரு முறை மலேசியா போகும்போது அங்கு தான் அவளை பார்த்தேன். பயங்கரமாக திட்டினேன். ஏண்டி உனக்கு போன் பண்ணனும் என்றால் மேனேஜரை கூப்பிட்டு தான் எங்களிடமே பேச சொல்லுவியா? என்று கேட்டேன். பழைய நட்பு அடிப்படையில் அப்படி உரிமையோடு அவளிடம் பேசினேன். உடனே அவள் தன்னுடைய போன் நம்பரை கொடுத்து கூப்பிடு என்று சொன்னார். நானும் போன் பண்ணினேன். தொடர்ந்து 4 முறை கூப்பிட்டேன். ஆனால், அவ எடுக்கவே இல்லை. மீண்டும் அவாய்ட் பண்ண ஆரம்பித்தது தெரிந்தது. பொதுவாகவே அந்த இடத்திற்கு போனதுக்கப்புறம் அவர்களுக்குள் அந்த மாதிரி செய்ய தோணுதோ? என்று தெரியவில்லை என்று கூறினார். இப்படி இவர் பேசி இருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.