தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

விஜய் நடித்த படங்களுக்கு இளையராஜா, தேவா, வித்யாசாகர், ஏ.ஆர்.ரஹ்மான், அனிருத் என பலரும் இசையமைத்து வந்துள்ள நிலையில், யுவன்சங்கர் ராஜாவுக்கு அந்த வாய்ப்பு அதிகமாக கிடைக்கவில்லை. விஜய் நடித்து 2003 ஆம் ஆண்டு வெளியான புதிய கீதை என்ற ஒரே ஒரு படத்திற்கு மட்டுமே அவர் இசையமைத்துள்ளார்.
அதேசமயம் அஜித் நடிப்பில் தீனா, பில்லா, பில்லா 2, ஆரம்பம், நேர்கொண்டபார்வை, வலிமை என பல படங்களுக்கு இசை அமைத்து ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இப்படியான நிலையில் தற்போது விஜய்யுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் யுவன்.
தற்போது அவர் விஜய்யுடன் இணைந்து எந்த படத்திலும் பணியாற்றாதபோதும் திடீரென்று அவருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை யுவன் சங்கர் ராஜா வெளியிட்டிருப்பதால் அடுத்தபடியாக விஜய் நடிக்கும் ஏதேனும் புதிய படத்திற்கு இசையமைக்க யுவன் ஒப்பந்தமாகி இருக்கிறாரா? என்கிற கேள்வியும், எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
சிலர் பீஸ்ட் படத்தில் அனிருத் இசையில் யுவன் ஒரு பாடல் பாடியிருப்பார் என தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலரோ மீண்டும் லோகேஷ் உடன் விஜய் இணையும் படத்தில் இவர் இசையமைக்கலாம் என கூறி வருகின்றனர். ஆக, விஜய் -யுவன் சங்கர் ராஜா இருவரும் 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.




