ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த வருடம் கவுதம் கிச்சலு என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். கடந்த சில மாதங்களாகவே காஜல் அகர்வால் கர்ப்பமாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதனால், நாகார்ஜுனா நடிக்கும் 'த கோஸ்ட்' படத்திலிருந்தும் விலகிக் கொண்டார்.
கமல்ஹாசனுடன் நடிக்கும் 'இந்தியன் 2' படத்திலும் காஜல் அகர்வால் தொடர்வாரா என்பது சந்தேகமே. அவருக்குப் பதிலாக நடிக்க தமன்னா, த்ரிஷா ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தெரிகிறது.
இதனிடையே, காஜல் அகர்வால் அவரது தோழிகளுடன் சமீபத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகின்றன. அவற்றில் காஜல் அகர்வாலின் கர்ப்பமான வயிறு தெளிவாகத் தெரிகிறது. அவரது தோற்றத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த செய்திகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. எனவே, காஜல் விரைவில் அது பற்றி வெளிப்படையாக அறிவிக்கலாம் எனத் தெரிகிறது.