பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
ஜோன் வாட்ஸ் இயக்கத்தில், டாம் ஹாலந்த், ஜென்டயா மற்றும் பலர் நடித்த 'ஸ்பைடர்மேன் - நோ வே ஹோம்' படம் கடந்த வாரம் டிசம்பர் 16ம் தேதி இந்தியா முழுவதும், ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இப்படத்திற்கு இந்தியாவில் மிகப் பெரும் வரவேற்பு கிடைத்தது. இந்திய மொழிப் படங்களை விடவும் இந்தப் படத்தின் வசூல் அதிகமாக இருந்ததாகத் தெரிவிக்கிறார்கள்.
பாலிவுட் டிராக்கரான தரன் ஆதர்ஷ் 'ஸ்பைடர்மேன்' படத்தின் வசூல் வியாழன், வெள்ளி, சனி ஆகிய நாட்களிலேயே 100 கோடி வசூலைக் கடந்துவிட்டதாகத் தெரிவிக்கிறார். நிகர வசூல் 79 கோடி, அதில் வியாழன் 32.67 கோடி, வெள்ளி 20.37 கோடி, சனி 26.10 கோடி வசூலித்துள்ளதாம். இதன் மூலம் இந்த ஆண்டில் அதிக வசூலித்த 'சூர்யவன்ஷி' படத்தின் நிகர வசூலான 77 கோடியை 'ஸ்பைடர்மேன்' முந்தியுள்ளது.
இந்தியாவில் அதிக வசூல் செய்த ஹாலிவுட் படம் என்ற பெருமையை 446 கோடி வசூலுடன் 2019ல் வெளிவந்த 'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' வைத்துள்ளது.