என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
தீபாவளிக்கு வெளியான எனிமி படத்தை தொடர்ந்து விஷால் தற்போது வீரமே வாகை சூடும் மற்றும் லத்தி என இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.. இதுதவிர துப்பறிவாளன்-2 படத்தை இயக்கி நடிக்கப்போவதாகவும் கூறி வருகிறார்.
இந்தநிலையில் விஷால் நடிக்கும் அவரது 33வது படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். எனிமி படத்தை தயாரித்த வினோத்குமாரே இந்தப்படத்தையும் தயாரிக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது..
த்ரிஷா இல்லேன்னா நயன்தார படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் தான் ஆதிக் ரவிச்சந்திரன்.. அடுத்தததாக சிம்புவை வைத்து 'அன்பானவன் அடங்காதவன் அசராதவன்' படத்தை இயக்கிய இவர் தற்போது பிரபுதேவாவை வைத்து பகீரா என்கிற படத்தை இயக்கியுள்ளார்.. அந்தப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.