ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன் | 23 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த் | பார்க்கிங் மோதல் விவகாரம் : தர்ஷனுக்கு ஆதரவாக குரல் கொடுத்த சனம் ஷெட்டி! | 'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? |
பொதுவாக இளம் முன்னணி ஹீரோக்கள் தங்களது படம் வெளியாகும் தினத்தன்றே காலைக்காட்சியில் தியேட்டர்களுக்கு சென்று ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்து படத்திற்கான வரவேற்பு எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வார்கள். படத்திற்கு புரோமோஷன் ஆகவும் இது உதவும். அதேசமயம் பெரும்பாலும் கதாநாயகிகள் இப்படி தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பது ரொம்பவே குறைவு தான். ஆனால் நடிகை ஸ்ரேயா தற்போது தியேட்டருக்கு நேரிலேயே வந்து தனது படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளார். அதுவும் தியேட்டருக்கு ஆட்டோவிலேயே வந்து இறங்கி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
ஸ்ரேயா நடிப்பில் நீண்ட நாட்களுக்கு பிறகு தற்போது தெலுங்கில் வெளியாகியுள்ள படம் கமனம். இந்த படத்தில் நித்யா மேனன் இன்னொரு கதாநாயகியாக நடித்துள்ளார். அறிமுக இயக்குனர் சுஜனா ராவ் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹைதராபாத்தில் உள்ள மல்லிகார்ஜுன் என்கிற தியேட்டரில் இந்தப்படத்தை பார்ப்பதற்காக ஸ்ரேயா ஆட்டோவில் வந்து இறங்கிய புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.