ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் எச்சரிக்கை | ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாகும் ‛ஸ்டார்' பட நடிகை | நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா |
ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் தேஜா, ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரகனி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‛ஆர்ஆர்ஆர்'. பாகுபலி படங்களுக்கு பின் ராஜமவுலி இயக்கத்தில் வெளியாகும் படம் என்பதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.
சுதந்திர போராட்ட காலத்தை மையப்படுத்தி கொமரபீம், அல்லுரி சீதாராம ராஜூ ஆகியோரின் வாழ்க்கை பயணமாக கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. கீராவணி இசையமைத்துள்ளார். ஏற்கனவே படத்தின் சில பாடல்கள், டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் இன்று(டிச., 9) டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. டிரைலர் வெளியான சில நிமிடங்களிலேயே வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக தெலுங்கு டீசர் வெளியான 10 நிமிடத்தில் 5 லட்சம் பார்வைகளையும், 1.2 லட்சம் லைக்குகளையும் பெற்றது.
படத்தின் கதைக்களம் இதுதான் : நெருங்கிய நண்பர்களாக ராம்சரணும், ஜூனியர் என்டிஆரும் இருக்கிறார்கள். ஆங்கிலேய படையில் இருக்கிறார் ராம் சரண். ஆங்கிலேயேர்களுக்கு எதிராக செயல்பட்டதாக நண்பர் ஜூனியர் என்டிஆரை கைது செய்யும் அளவுக்கு போகிறார் ராம் சரண். ஒருக்கட்டத்தில் ஆங்கிலேயேர்களின் கொடுமையை பொறுக்க முடியாமல் அவர்களுக்கு எதிராகவே களமிறங்குகிறார் ராம்சரண். அதன்பின் நண்பர்கள் ஜூனியர் எடிஆரும், ராம் சரணும் மீண்டும் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுவது போன்று கதை நகருவதை டிரைலரை பார்க்கும் போது புரிந்து கொள்ள முடிகிறது. கதை என்னமோ சாதாரணமானது போலத்தான் தெரிந்தாலும் ராஜமவுலி திரைக்கதை மற்றும் டிரைலரில் அவர் காட்டி உள்ள விஷூவல் ட்ரீட் நிச்சயம் படத்தை வேற லெவலுக்கு கொண்டு செல்லும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியிடப்பட்ட டிரைலருக்கு தெலுங்கில் தான் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. ஒரு மணிநேரத்திற்குள்ளாகவே 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளையும், 4.45 லட்சம் லைக்குகளையும் பெற்றது. அடுத்து ஹிந்தி டிரைலருக்கு அதிக பார்வைகள் கிடைத்தன.
ஆர்ஆர்ஆர் படம் வருகிற ஜன., 7ல் உலகம் முழுக்க சுமார் 10 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாக போகிறது. அதோடு படத்தை 3டி, ஐமேக்ஸ் டால்பியிலும் திரையிட உள்ளனர்.