ரஜினியின் 'ஜெயிலர்-2' படத்தில் இணைந்த ஹிந்தி நடிகை அபேக்ஷா போர்வல்! | 15 கிலோ எடை குறைத்த கிரேஸ் ஆண்டனி! | கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் அமரன்! | சூர்யாவின் 'கருப்பு' படத்தின் கிளைமாக்ஸை மாற்றும் ஆர்.ஜே.பாலாஜி! | விக்னேஷ் சிவனை தொடர்ந்து ரோல்ஸ் ராய்ஸ் ஸ்பெக்டர் எலக்ட்ரிக் கார் வாங்கிய அட்லி! | 'பைசன் முதல் தி ஜூராசிக் வேர்ல்ட்' வரை..... இந்த வார ஓடிடி ரிலீஸ்..! | 'தி பேமிலி மேன் 3' ரிலீஸ்: பதட்டமாகவும், சந்தோஷமாகவும் இருக்கு: மனோஜ் பாஜ்பாய் | என் பெயரில் வரும் அழைப்புகள், மெசேஜ்கள் போலியானவை: தனுஷ் மானேஜர் அறிக்கை | பெண்களை இழிவாக பேசும் இயக்குனர்: திவ்யபாரதி புகார் | 'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு |

தமிழில் 'டம்மி டப்பாசு' படத்தில் அறிமுகமானவர் ரம்யா பாண்டியன். அதன்பின் வெளிவந்த 'ஜோக்கர்' படம் அவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்தது. அதற்கு பின் அவருடைய புடவை அணிந்த கவர்ச்சியான போட்டோ ஷுட் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அடுத்து டிவியில் அவர் கலந்து கொண்ட 'குக் வித் கோமாளி, பிக் பாஸ் சீசன் 2' ஆகியவை அவருக்கு மக்களிடம் நல்ல பிரபலத்தைத் தந்தது.
அவர் கடைசியாக தமிழில் நடித்த 'ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்' படம் ஓடிடி தளத்தில் வெளியானது. அடுத்து மலையாளப் படத்தில் முதல் முறையாக நடிக்க உள்ளார் ரம்யா. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மம்முட்டி நாயகனாக நடிக்கும் 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற படத்தில் ரம்யா நடிக்கிறார்.
இப்படம் குறித்து, “எனது அடுத்த புரொஜக்ட் மலையாளத்தில் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி. விமர்சன ரீதியாக பெயர் பெற்ற, அதிகமான தாக்கத்தை ஏற்படுத்தும் இயக்குனர் லிஜோ ஜோஸ் இயக்கத்தில் மம்முட்டி சாருடன் நடிப்பதன் மூலம் கனவு நனவாகிறது. தேனி ஈஸ்வர் சாருக்கும் அவரது குழுவினருக்கும் நன்றி,” என மலையாளப் படத்தில் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் ரம்யா.




