ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' | சிவாவை இயக்குகிறார் ‛தங்கமீன்கள்' ராம்? | அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் சாதனையை முறியடித்த பதான் |
மகேஷ்பாபு தெலுங்கில் தற்போது நடித்து வரும் படம் சர்க்காரு வாரி பாட்டா. பரசுராம் இயக்கும் இந்தப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வங்கி ஊழல்களை மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்தப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்னதாக மகேஷ்பாபுவுக்கு மைனர் அறுவை சிகிச்சை ஒன்று நடைபெற இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
மகேஷ்பாபு கடந்த சில நாட்களாகவே முழங்கால் வலியால் அவதிப்பட்டு வருவதாகவும் அதற்காகவே இந்த மைனர் சர்ஜரி செய்யப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஐதராபாத் அல்லது அமெரிக்காவில் இந்த சர்ஜரி நடக்க இருப்பதாக இரண்டு விதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மகேஷ்பாபுவின் ரசிகர்கள், “சீக்கிரம் குணமாகி வாருங்கள் அண்ணா” என சோஷியல் மீடியாவில் தங்களது பிரார்த்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.