போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
அண்ணாத்த படத்தை பெரும் எதிர்பார்ப்புடன் நடித்து கொடுத்தார் ரஜினி. ஆனால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ரஜினியின் நடிப்புக்கு பெயர் கொடுத்தாலும் தன் படம் ரசிகர்களுக்கு திருப்தியை ஏற்படுத்தவில்லை என்று ரஜினி கவலையில் இருக்கிறார். எனவே அடுத்த பட கதை தேர்வில் கவனமாக இருக்கிறார்.
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது. இதையடுத்து தனுஷ் இயக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வந்தது. அதன்பின் பாண்டிராஜ் இயக்குவதாக சமீபத்தில் தகவல் ஒன்று உலா வருகிறது.
இதற்கிடையே ரஜினி, சில சீனியர் இயக்குனர்களையும் அழைத்து அடுத்த படத்திற்கான கதையை கேட்டுள்ளார். ஆனால் கதை கூறிய இயக்குனர்கள் அனைவருமே ஒன் லைனில் மட்டுமே கதையை சொல்லியிருக்கிறார்கள். அவர்கள் கூறிய எந்த கதையும் ரஜினியை திருப்திப்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
தனது அடுத்த படம் கண்டிப்பாக வெற்றிப் பெற்றே ஆக வேண்டும். அதேநேரம் நல்ல கதையும், விரைவில் படத்தை இயக்கி முடிக்கும் இயக்குனராகவும் இருக்க வேண்டும் என்று ரஜினி விரும்புகிறாராம். அதனால் அதற்கு சரியான தேர்வாக முன்னணி இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாராக தான் இருக்க முடியும் என்று முடிவு செய்துள்ள ரஜினி, விரைவில் ஒரு நல்ல கதையை தயார் செய்து கொண்டு வரும்படி கேட்டிருக்கிறாராம். அதனால் ரஜினியின் அடுத்த பட இயக்குனர் கே.எஸ்.ரவிகுமாராக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. கடைசியாக ரஜினியை வைத்து லிங்கா படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் ரஜினியின் இன்னொரு தேர்வாக இயக்குனர் சுந்தர்.சியும் இருக்கிறார் என்கிறார்கள். அவரிடமும் கதை கேட்டுள்ளாராம்.