'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் | விஜய் சினிமாவை விட்டு செல்லக் கூடாது : இயக்குனர் மிஷ்கின் வேண்டுகோள் | இருமுடி கட்டி சபரிமலை சென்ற நடிகர்கள் கார்த்தி, ரவி மோகன் |
தமிழ் சினிமாவில் கதாநாயகர்களை அவர்களது பெயர்களை மட்டும் சொல்லி அழைக்காமல் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப் பெயரைக் கொடுத்து அதன்படி அழைப்பது பல வருட வழக்கமாக உள்ளது. ஏழிசை வேந்தர், புரட்சித்தலைவர், நடிகர் திலகம், காதல் மன்னன், லட்சிய நடிகர், சூப்பர் ஸ்டார், ஆண்டவர், உலக நாயகன், புரட்சித் தமிழன், சுப்ரீம் ஸ்டார், இளைய திலகம், ஆக்ஷன் கிங், தளபதி, இளைய தளபதி, சின்ன தளபதி, மக்கள் செல்வன் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
நடிகர்களில் கமல்ஹாசன் தான் முதன் முதலில் தனது ரசிகர் மன்றங்களைளக் கலைத்து நற்பணி இயக்கமாக மாற்றினார். அதன்பிறகு அஜித்குமார் அவரது ரசிகர் மன்றங்களைக் கலைத்தார். பின்னர், தன்னை அல்டிமேட் ஸ்டார் என அழைக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களின் டைட்டிலில் கூட வெறும் அஜித்குமார் என்று பட்டப் பெயர் இல்லாமல் தான் அவர் பெயர் இடம் பெறும்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 2001ல் வெளிவந்த தீனா படத்தில் ரவுடியாக நடிக்கும் அஜித்தை மற்றவர்கள் தல என்று அழைப்பார்கள். அந்தப் பெயர் அப்படியே அஜித்திற்கு நிலைத்துவிட்டது. அவரது ரசிகர்கள் அவரை தல என்று தான் எப்போதும் குறிப்பிட்டு வந்தார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமாக இத்தனை வருடமாக இருந்த தோனியை தல என்று கிரிக்கெட் ரசிகர்கள் அழைக்க ஆரம்பித்தார்கள். சமீபத்தில் கூட சமூக வலைத்தளங்களில் தோனி ரசிகர்களுக்கும், அஜித் ரசிகர்களுக்கும் யார் தல என்பது குறித்து சண்டை நடந்தது.
இந்நிலையில் நேற்று தன்னை இனி தல என அழைக்க வேண்டாம், அஜித்குமார், அஜித், எகே என அழையுங்கள் என அஜித் வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னுடைய ரசிகர்கள் தேவையற்ற சர்ச்சைகளில் ஈடுபடுவதை அஜித் விரும்பவில்லை என்றே தெரிகிறது. ரசிகர்கள் மீதான அவருடைய பாசம்தான் இதற்குக் காரணம் என்கிறார்கள். அஜித்தின் இந்த முடிவுக்கு அவருடைய ரசிகர்கள் பெரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
சில வாரங்களுக்கு முன்பு கூட தெலுங்கில் பவர் ஸ்டார் என்று அழைக்கப்படும் பவன் கல்யாண், தன்னை அப்படி அழைக்க வேண்டாம் என்று கண்டிப்புடன் கூறியிருந்தார். இந்த விஷயத்தில் அவர் அஜித்தைப் பின் தொடர்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
அஜித்தைப் போலவே மற்ற ஹீரோக்களும் பட்டப் பெயர்களை துறப்பார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி.