'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என மூன்று திரையுலகிலும் இசையமைப்பாளர் அம்ரிஷ் பிசியாகியுள்ளார். இதுவரை தமிழ் படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த இவர் சமீபத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கும் பாகமதி ஹிந்தி படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார். அடுத்து தெலுங்கில் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படத்திற்கும் இசையமைக்கிறார். இப்படத்திற்கு 'முட்ட பொம்மா...' பாடலை எழுதிய ராம் அஜோகய்யா சாஸ்திரி பாடல் எழுதுகிறார். நாயகனாக கிரண் நடிக்க, ஜோதி கிருஷ்ணா இயக்குகிறார். இப்படத்தின் பாடல் பதிவு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.
அம்ரிஷ் கூறுகையில், ''தெலுங்கு சினிமாவில் புகழ் பெற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. ஒரே சமயத்தில், பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என, இந்திய அளவில் பணிபுரிவது பெரும் ஊக்கமாக உள்ளது,'' என்றார்.